அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல - கொந்தளிக்கும் ராஜன் செல்லப்பா.!

52shares

நடிகர் விஜய் நடிப்பில் நேற்றைக்கு முன் தினம் வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், ஆட்சியாளர்களையும் விமர்சித்து காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. இதன் காரணத்தினால் அதிருப்தியடைந்துள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி என்ற பெயரையே சர்கார் திரைப்படத்தின் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு சூட்டி அவரை இழிவு படுத்தும் வண்ணம் பல காட்சிகளும், தற்போதைய அரசு குறித்து சர்ச்சைக்குரிய கட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக ஆளும் தரப்புக்கு தொடர்ச்சியாக தகவல்கள் பறந்த நிலையில், சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும் ; இப்படியான நடிகர்களை தொடர்ச்சியாக அனுமதித்தால் எல்லை மீறும் வகையில் செயல்படுவார்கள். ஆகவே, திரைப்படம் ஓடாத சூழலை ஏற்படுத்துங்கள் என சில முன்னணி நிர்வாகிகள் ஆவேசப்பட்ட நிலையிலேயே இன்று தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்படும் திரையரங்குகள் தாக்கப்பட்டுவருகின்றன.

முன்னதாக, இன்று மாலை மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, " இந்த சமூகத்தின் மீது பேரன்பு கொண்டு எங்கள் தலைவி செயல்படுத்திய திட்டங்களை விமர்சித்து வைக்கப்பட்டுள்ள காட்சிகள் நீக்கப்படாவிட்டால் சர்கார் திரைப்படம் மதுரையில் எங்கும் ஓடாது. எங்களை மீறி திரையிட்டால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என ஆவேசமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க