சிறுமி ராஜலட்சுமி கொலையாளி நிச்சயம் தண்டிக்கப்படுவார் - சேலம் ஆட்சியர் ரோகிணி.!

61shares

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி ராஜலட்சுமி (13), கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அதே பகுதியை சேர்ந்த தினே‌ஷ்குமார் என்ற நபரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை கிளப்பியது.

இதனை வெறுமனே சாதிய கொலையாக மட்டும் கருதாமல் பெண்களுக்கு எதிரான மோசமான குற்றச்செயல்களில் இதுவும் ஒன்று என்ற காரணத்தினால் சிறுமி ராஜலட்சுமியை வெட்டிக்கொலை செய்த கொலையாளிக்கு தினேஷ்குமாருக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லாவிடில் நாங்கள் பாரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருக்குமென தமிழக அரசை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தியிருந்தார் விசிக தலைவர் திருமா.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சேலம் ஆட்சியர் ரோகினி, நிச்சயமாக சிறுமி ராஜலட்சுமி கொலையாளிக்கு தண்டனை பெற்றுத்தரப்படுமென தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க