எவரையும் எதிர்க்கும் துணிச்சல் எங்களுக்கு உண்டு - வைகோவை விளாசும் திருமா.!

32shares

கடந்த 2016 சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியாக இயங்கியது முதல் தற்போது திமுக தோழமை கட்சிகளாக செயல்பட்டு வரக்கூடிய காலம் வரை நட்புடனேயே இருந்து வந்த மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் இடையே தற்போது மோதல் கிளம்ப தொடங்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னாள் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட வைகோவிடம், ஒடுக்கப்பட்ட மக்களை ஆட்சி, அதிகாரத்திற்கு நகர்த்துவதில் திராவிட இயக்கங்கள் சுணக்கமாக இயங்குகின்றனவா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, எங்கள் வீட்டில் வேலை செய்பவர்களே தலித்துகள் தான் என்றும், அவர்கள் ஆட்சிக்கு வருவதை தாங்கள் தடுக்கவில்லை என்றும் பதிலளித்திருந்தார்.

வைகோவின் மேற்கண்ட பதிலால் அதிருப்தியடைந்த விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது முகநூல் பக்கத்தில் வைகோவை விமர்சிக்க, அதற்கு நான் ஆபத்தானவன் என்னிடம் மோதாதீர்கள் என விசிகவினரை எச்சரித்திருந்தார் வைகோ.

இந்நிலையில், வைகோவின் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள திருமா, "எவரையேனும் எதிர்க்க வேண்டுமென்றால், விமர்சிக்க வேண்டுமென்றால் அதனை நேரடியாக செய்பவர்கள் நாங்கள். கட்சியினரை தூண்டிவிட்டு மலிவான அரசியலை செய்பவர்கள் நாங்கள் அல்ல" என வைகோவுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க