நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்.!

16shares

தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இந்து அதிகாலை உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார் ஜெயராமன்.

ஜெயராமன், பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றிவந்தவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். நம்மாழ்வாரின் இளைஞர் குழுவில் பயிற்சிபெற்ற ஜெயராமன், அவரின் வேண்டுகோளுக்கிணங்க பாரம்பர்ய நெல் ரக உற்பத்தியைப் பெருக்கிவந்தார்.

நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரகங்களை மீட்டிருக்கும் நெல் ஜெயராமன், ஒவ்வொர் ஆண்டும் திருத்துறைப்பூண்டி வட்டம், ஆதிரெங்கம் கிராமத்தில் தேசிய அளவிலான நெல் திருவிழாவை 2006 ஆம் முதல் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

நெல் ஜெயராமனின் மறைவினையொட்டி, தமிழக அமைச்சர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கும், விவசாயிகளுக்கும் பேரிழப்பு என்பதுவே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க