என் உயிர் அண்ணன்.. திருமாவுக்கு அழைப்பு கொடுத்த சீமான்.!

96shares

சீமான் நாம் தமிழர் கட்சிக்கு புத்துயிர் ஊட்டி அரசியல் பயணம் துவங்கிய நாள் முதலே, எங்கள் அண்ணன் திருமாவளவனையும், விசிகவையும் திராவிட கட்சிகள் வாக்கு சேர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக கருதியே அவருடன் கூட்டணி வைத்துக்கொள்கின்றன.

ஆனால், திராவிட கட்சிகளுக்கு தமிழக நலனிலோ, சாதி ஒழிப்பிலோ, ஒடுக்கப்பட்ட சமூகத்தினை தலைநிமிர செய்வதற்கான செயல்பாடுகளிலோ துளியளவும் உள்ளார்ந்த விருப்பம் இல்லை. ஆகவே, திராவிட கட்சிகளுடன் கூட்டு வைக்காமல் திருமா தமிழர் நலனுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், தலித்துகள் எங்கள் வீட்டில் வேலை செய்கிறார்கள் என்ற ரீதியில் வைகோ அளித்திருந்த பேட்டி விசிகவினரை அதிர்ச்சியடைய செய்த காரணத்தினால், வைகோவை விமர்சித்து பதிவிட்ட வன்னி அரசையும் கடுமையாக சாடிப்பேசினார் வைகோ. இவ்வாறு மதிமுக, விசிக மோதல் உச்ச கட்டத்தில் இருக்க நேற்று விசிக அலுவலகத்தில் திருமாவை சந்தித்து தனது இல்ல திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார் சீமான்.

அழைப்பிதழில் என் உயிர் அண்ணனுக்கு என எழுதப்பட்டிருந்த நிலையில், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இனியேனும் திராவிட கட்சிகளை நம்பாமல் தமிழர் நலக்கான அரசியலை முன்னெடுங்கள் திருமா என தெரிவித்துவருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.

இதையும் தவறாமல் படிங்க