மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை - அமைச்சர் சி.வி சண்முகம்.!

8shares

கர்நாடகத்தில் காவிரி அணையின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தொடர்ச்சியாக முயற்சித்து வந்த நிலையில், மேகதாதுவிற்கு குறுக்கே அணைக்கட்டுவதற்கான அறிக்கையை மத்திய நீர்வளத்துறை சில தினங்களுக்கு முன்னதாக ஏற்றுக்கொண்டது. மேலும், அணை கட்டுவதற்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசுக்கு எதிராக அவதூறு வழக்கினை தொடர்ந்துள்ளது.

அதே சமயம், மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த கர்நாடகத்தின் அரசின் அழைப்பையும் நிராகரித்துள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், கர்நாடகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க