மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு ; தீர்மானம் இயற்றியது தமிழக அரசு.!

15shares

கர்நாடக மாநிலம், மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப்பெற வேண்டும் எனவும், அவ்வாறு அனுமதி வழங்கியமைக்கு கண்டனம் தெரிவித்தும் சிறப்பு சட்ட மன்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது தமிழக அரசு.

மேகதாது அணை தொடர்பாக இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கர்நாடக அரசு சட்டத்திற்கு புறம்பாக அணை கட்டுவது தவறு என்பதை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு வழங்கப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு நேற்று அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த நிலையிலேயே, தமிழக சட்டப்பேரவை கூடி மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சட்ட மன்ற கூட்டத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க