சுற்றுலாத்தளமாக்கப்படுகிறது சபரிமலை - குற்றம் சாட்டும் சசி தரூர்.!

8shares

பாலின பாகுபாடுகளை காரணம் காட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள்ளாக வழிபாடு மேற்கொள்ள அனுமதி மறுப்பதென்பது சட்டவிரோத செயல். ஆகவே, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்கு பெண்களுக்கு அனுமதி வழங்கப்படவேண்டுமென கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் மேற்காண் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவ அமைப்புகளும், பொதுமக்களும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்துவதில் மும்முரம் காட்டியது கேரள அரசு.

அதற்கான முயற்சிகளில் சில தோல்விகளை தழுவ நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவைச் சேர்ந்த இரு இளம்பெண்களும், இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணும், மலேசியாவை சேர்ந்த சில பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு மேற்கொண்டதாக கேரள காவல்துறை தகவல் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவரும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான சசி தரூர், புனித தளங்களுள் ஒன்றான சபரிமலை சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். "மேற்கத்திய நாடுகளில் மதம் தொடர்பான நம்பிக்கைகளை மத அமைப்புகளே தீர்மானிக்கின்றன. நீதிமன்றங்கள் அதில் தலையிட முடியாது. பாலின சமத்துவம் பேசுபவர்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். கிறித்தவ கத்தோலிக்க சபைகளில் பெண் பாதிரியார்கள் நியமிக்கப்படுவதில்லை ; ஆனால், ஏஞ்சலிக்கன் சபைகளில் இரு பாலினத்தவரும் பாதிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

சபரிமலை விவகாரத்தை பொறுத்தமட்டில் அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல், சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டுமென தெரிவித்திருப்பதுவும் ஆனால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கூடாதென கேரள காங்கிரஸ் போராடி வருவதுவும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க