மூன்று சதவிகிதம் கூட இல்லாதோருக்கு 10% இடஒதுக்கீடா ; சமூக நீதியை தகர்க்கும் முயற்சி.!

24shares

உயர் சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு (வருடத்திற்கு 8 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள்) கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு அளிக்க முயல்வதென்பது இடஒதுக்கீடு என்ற சமூக நீதி தத்துவத்தினை தகர்க்கும் முயற்சி என மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "இயற்கைக்கும் அறத்திற்கும் எதிராக, பிறப்பால் மனிதரைத் தரம் தாழ்த்தி இழிவு செய்யும் சாதியத்தை தனது மரண தறுவாயிலும் வலுப்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக மோடி அரசு. ஏனென்றால் இன்னும் மூன்று மாதத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் அகற்றப்பட்டுவிடுவோம் என்பது அதற்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு (மேல்சாதியினர்) அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124 ஆவது திருத்தம் செய்யும் மசோதாவைக் கொண்டுவந்திருக்கிறது.

சூழ்ச்சிகர பாஜகவும் அதன் சூதுமிகு பிரதிநிதியுமான நரேந்திர தாமோதர தாஸ் மோடியும் மனித மாண்புகளுக்குப் வேண்டும். ஏனென்றால் பிரதமர் மோடியால் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கார்ப்பொரேட்களுக்கு மொத்த இந்தியருமே இரையாக்கப்படுகிறார்கள். அதேபோல்தான் இப்போது, 3 சதவீதம்கூட இல்லாத மேல்சாதியர்க்கு 10 சதவீதம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளித்து, இட ஒதுக்கீட்டையே ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்.

இப்படி திரேதா யுகத்தில் சஞ்சரிக்கும் மோடி காணும் பகல் கனவைக் கலைக்க புறம்பானவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால் நீதிமன்றம் செல்லும்போது இது சட்டப்படி செல்லாததாகிவிடும் என்பதுதான் இருக்கும் ஒரே ஆறுதல். ஆனாலும், உரக்கச் சத்தமிட்டு எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மேற்காண் விவகாரம் தொடர்பான நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க