பொங்கலுக்கு வீட்டிற்கு வருவானா? பேரறிவாளன் குறித்து அற்புதம்மாள் உருக்கம்.!

24shares

இன்னும் சில தினங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகமுழுவதுமுள்ள தமிழ் மக்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட ள்ளது. பொங்கல் கொண்டாட்டத்திற்கான ஆயத்த பணிகளில் தமிழ்ச்சமூகம் ஒரு புறம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 27 ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலுள்ள தனது மகன் பேரறிவாளன், இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டத்திற்காகவாது வீட்டிற்கு வருவாரா? என தனது ஏக்கத்தையும், நெடுங்கால எதிர்பார்ப்பினையும் சமூக வலைத்தளமான ட்விட்டர் வழி வெளிப்படுத்தியுள்ளார் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அற்புதம்மாள், "என் பொண்ணுங்க அறிவு பொங்கலுக்கு வருவான்னு காத்திருக்காங்க. தமிழகமெங்கும் அழைச்சு கேக்றாங்க.நம்பிக்கையா இருக்கேன். இது புது பொங்கலா? 28வது பொங்கலானு தெரியல? பொங்கலுக்கு வீட்டுக்கு வருவானா.பொங்கல் கழிச்சு நான் ரோட்டுக்கு வரனுமான்னு வர்ர நாட்கள் முடிவு செய்யும்" என பேரறிவாளன் தனது சகோதரிகளுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக, ராஜீவ் காந்தி கைது செய்யப்பட்டு சுமார் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிப்பது குறித்து மாநில அரசே முடிவெடுத்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததனையொட்டி, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்கும்படி மாநில ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்ததும், நீண்ட நாட்களாக அது கிடப்பில் போடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்