உ.பியில் தனித்து போட்டியிட தயார் - காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.!

10shares

எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்திர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட தயாராக உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் பாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான அணி சேர்க்கைகள் நாடு முழுவதும் தொடங்கிவிட்ட நிலையில், மக்களிடத்தில் அதிருப்தி உணர்வினை பெற்றுள்ள மத்திய பாஜக அரசினை வீழ்த்திட வேண்டுமென்றால் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டுமென காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் இணையக்கூடுமென கருதப்பட்டது.

இந்த நிலையில், உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளப் போவதாகவும் உ.பியில் காங்கிரஸுக்கு பலம் அவ்வளவாக இல்லையெனவும் மேற்கண்ட இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி குறித்த அறிவிப்பால் அதிருப்தியடைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் உ.பியில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயாராகவே அம்மாநில காங்கிரஸ் தலைவர் ராஜீவ் பாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க