சீமானுக்கு ஆண் பிள்ளை ; மகிழ்ச்சியில் நாம் தமிழர் தம்பிகள்.!

46shares

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதியினருக்கு நேற்றைய தினம் சென்னை தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் அவரது கட்சியினர்.

திரைப்படத்துறையில் இயங்கி வந்த சீமான், ஈழம் தொடர்பான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள தொடங்கியதன் பின்னர் ஈழப்போரால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை சபாநாயகருமான காளிமுத்துவின் மகள் கயல்விழியை, உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலையில் கரம் பிடித்தார்.

ஈழம் தொடர்பான உணர்வே தங்களை ஒன்றிணைத்ததாக பின்னாளில் தெரிவித்தனர் சீமானும், கயல்விழியும். இந்த நிலையில், சீமான் - கயல்விழி தம்பதிக்கு நேற்றைய தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக உற்சாகமடைந்துள்ள நாம் தமிழர் கட்சியினர் இனிப்புகளை பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க