மது விலக்கு இருக்கட்டும் ; முதலில் திமுகவினர் நடத்தும் மதுபான ஆலைகளை மூடுங்கள்.!

44shares

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில தினங்களாக திமுக சார்பில் தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென கூறி, அவரே சில ஊராட்சி சபை கூட்டங்களிலும் பங்கெடுத்து வருகிறார். ஆனால், கடந்த காலங்களில் ஆட்சி - அதிகாரத்தில் இருந்த சமயத்தில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இப்போது செய்வதெல்லாம், தேர்தலுக்கான வேடமா? என திமுகவினர் நடத்தும் ஊராட்சி சபை கூட்டங்களை விமர்சிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இந்த நிலையில், நேற்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், இள்ளலூர் கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்றார் ஸ்டாலின். அப்போது அவரிடம் மது விலக்கு குறித்து கேள்வியெழுப்பிய பெண்ணொருவர், திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு தீவிரமாக அமல்படுத்த படுமா என வினவினார்.

மேற்கண்ட பெண்ணின் கேள்விக்கு நீண்ட நேரம் பதிலளிக்காமல் அமைதி காத்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்றார்.

அப்போது, அங்கிருந்த பொதுமக்களோ தேர்தல் நேரத்தில் இதே போன்று தான் பேசிவருகின்றனர். இவர்கள் (திமுக) கட்சியினர் நடத்தும் மதுபான ஆலைகளிலிருந்தும் தானே டாஸ்மாக் கொள்முதல் செய்கிறது. உண்மையில் ஸ்டாலினுக்கு மக்கள் நலனில் அக்கறை இருக்குமேயானால் தங்களது கட்சியினர் நடத்தும் மதுபான ஆலைகளை மூடிவிட்டு மது விலக்கினை அமல்படுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாமே என திமுக மீது தங்களது அதிருப்தியினை வெளிப்படுத்தினர்.

இதையும் தவறாமல் படிங்க