பாஜகவுடன் கூட்டணியா? பதிலளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.!

34shares

கடந்த 2014 மக்களவை தேர்தல் சமயம், மத்தியில் மட்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையுமேயானால் ; பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பாரேயானால் இந்த நாடு வசந்தத்தின் பூமியாகிவிடும். ஈழ விவகாரத்தில் நமக்கு உற்ற துணையாக மோடி இருப்பார். ஊழல்கள், லஞ்ச - லாவண்யங்கள் இருக்காது என தமிழகத்தின் தெருக்களிலெல்லாம் மூரி முழங்கிக்கொண்டிருந்தார் ஓர் அரசியல் கட்சி தலைவர். அவர் வேறு யாருமல்ல ; மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவேதான்.

ஆனால், தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்றது. காட்சிகள் மாறியது. தனது பதவியேற்பு விழாவுக்கே வைகோவின் மொழியில் சொல்வதானால் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்தார் வைகோ முன்மொழிந்த நரேந்திர மோடி. இதனால் அதிருப்தி கொண்ட வைகோ பாஜவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். தற்போது காங்கிரஸ், திமுகவுடன் இணக்கமாக செயல்பட்டுவருகிறார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் தமிழக பாஜக தொண்டர்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, பாஜகவின் கூட்டணி கதவுகள் திறந்தே இருப்பதாகவும், பழைய நண்பர்களும் கூட்டணிக்கு வரலாம் என அழைப்புவிடுத்திருந்தார்.

பாஜகவின் கூட்டணி அழைப்புக்கு பதிலளித்துள்ள வைகோ, "ஈழ விவகாரத்தில் வாஜ்பாய் போன்று செயல்படுவதாக கூறி ஏமாற்றிவிட்டார் மோடி. அவரது தலைமையில் நாடு பின்னோக்கி சென்றுவிட்டது. இனி அவர்களுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை" என தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க