கொடநாடு கொள்ளைச் சம்பவத்தில் எனக்கு தொடர்பா? முதல்வர் பழனிசாமி பேட்டி.!

11shares

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கிற வகையில் இத்தகைய செய்திகளை வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.

மறைந்த ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தின் போது 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் 5 பேர் சாவு என்பது திட்டமிட்ட கொலை என கனகராஜ் கொலையும் சந்தேகத்துக்கிடமானது என்றும் திடுக் தகவலை அடங்கிய காணொளியை தெஹல்கா செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.

அதில், கைக்கடிக்காரங்கள்தான் கொடநாடு எஸ்டேட்டில் திருடப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. வெறும் கடிகாரங்களை திருடவா முன்னாள் முதல்வர் இல்லத்தில் கொலை நடந்திருக்கும் என்ற கேள்வி எழுப்பப்படாமல் இருந்தது. இதற்காகத்தான் நான் விடைதேடி ஆய்வுகளை மேற்கொண்டேன். கொடநாடு எஸ்டேட்டில் இருந்து திருடப்பட்ட ஒபிஎஸ், தினகரன் உள்ளிட்டோர் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் இப்போது அந்த 'முக்கிய பிரமுகரிடம்' உள்ளன. எனவேதான் அவர்கள் அமைதியாக உள்ளனர். அந்த முக்கிய பிரமுகர் தமிழக முதல்வர் பழனிசாமிதான் எனவும் தெரிவித்திருந்தார் மேத்யூஸ்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், கொடநாடு கொள்ளைச் சம்பவத்தில் எனக்கு தொடர்பு உள்ளதாக உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அத்தகைய காணொளி வெளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைமேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.மேலும், அரசியல் ரீதியாக நேராக எங்களிடம் மோத இயலாதவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி.

இதையும் தவறாமல் படிங்க