ஆளுநருக்கு நிர்மலாவைத்தான் பிடிக்கும் - வேல்முருகன் அதிரடி பேச்சு.!

22shares

தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்று தற்போது சிறையிலுள்ள பேராசிரியை நிர்மலாதேவி போன்றவர்களைத்தான் பிடிக்குமென தெரிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.

எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்த இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளையும், பேரறிவாளன் உள்ளிட்ட ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரையும் விடுவிக்க வேண்டுமெனக்கோரி நடைபெற்ற கோரிக்கை கருத்தரங்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார்.

நிகழ்வில் பேசிய வேல்முருகன், "பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்க வேண்டுமென மாநில அமைச்சரவை பரிந்துரைத்துள்ள போதிலும், எம்ஜிஆர் - அண்ணா உள்ளிட்டோரின் பிறந்த நாட்கள் சமயத்தில் நெடுங்காலம் சிறைத்தண்டனை அனுபவித்த இஸ்லாமிய சிறைவாசிகளை சிறைத்துறை விடுக்க முயலும் சமயத்திலும் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாக தெரிகிறது. அவருக்கு பேரறிவாளன் உள்ளிட்ட பெயர்களையெல்லாம் கண்டால் பிடிக்காது. நிர்மலா தேவி போன்ற இளம்பெண்களை தயார் செய்து தருபவர்களைத்தான் பிடிக்கும்" என ஆளுநரை மிக காட்டமாக விமர்சித்து பேசினார்.

இதையும் தவறாமல் படிங்க