வாழு அல்லது வாழ விடு.. அறிக்கை மூலம் பாஜகவுக்கு குட்டு வைத்த அஜித்.!

22shares

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அஜித் ரசிகர்கள் சிலர் தமிழக பாஜக தமிழிசை முன்னிலையில் பாஜகவில் இணைந்த நிலையில், அவர்களை வரவேற்று பேசிய தமிழிசை, நடிகர் அஜித்தின் ரசிகர்கள் இனி பிரதமர் மோடியின் ரசிகர்களாகவும் மாறி மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், நடிகர் அஜித் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபட எந்த ஆர்வமும் இல்லை தேர்தலின் போது வாக்களிப்பது மட்டுமே அரசியலில் என் உச்சகட்ட தொடர்பு. அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என்மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையே தான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்தவொரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "என் ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும். சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக் கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு’ வாழு வாழ விடு" என தனது ரசிகர்களுக்கு அரசியல் சார்ந்த தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளதுடன், தனது பெயரை பயன்படுத்த நினைத்த பாஜகவுக்கும் குட்டு வைத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க