அதிக கட்டவுட் வையுங்கள்; பாலபிஷேகம் செய்யுங்கள்; திடீரென்று சிம்பு பல்டி!

23shares

நடிகரும், திரைப்பட இயக்குனரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான டி.ராஜேந்தரின் மகன் நடிகர் சிம்பு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என கருதப்படுகிறார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, விரைவில் வெளியாகவுள்ள தனது திரைப்பட வெளியீட்டின் போது கட் அவுட், பேனர், பாலபிஷேகம் போன்ற செயல்களை ரசிகர்கள் செய்யாமல் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள காணொளியில், விரைவில் வெளியாகவுள்ள வந்த ராஜாவாக தான் வருவேன் என்ற தனது திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்கள் கட் அவுட், பேனர்கள் வைத்திட வேண்டுமெனவும், பாக்கட்டில் பால் வாங்கி பேனர்களுக்கு அபிஷேகம் செய்திடாமல் பெரிய அண்டா மூலம் பால் கொண்டுவந்து தனது பேனர்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சிம்புதான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனவும், அவரை வைத்து சமூக பிரச்சனைகளை மையப்படுத்திய திரைப்படங்களை இயக்க போவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க