பாஜகவில் இணைய அஜித்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? தமிழிசை விளக்கம்.!

12shares

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் முன்னிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலர் பாஜகவில் இணைந்தனர். அந்த நிகழ்வில் பேசிய தமிழிசை, அஜித்தின் ரசிகர்கள் இனி பிரதமர் மோடியின் ரசிகர்களாக மாறி தமிழகம் முழுவதும் பாஜகவின் சாதனைகளை எடுத்துச்செல்ல - சொல்ல வேண்டுமென கூறினார்.

தமிழிசையின் மேற்கண்ட பேச்சு அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்பட நிலையில், நேற்றைய தினம் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார் அஜித். அதில், தான் தொழில்முறை நடிகராகவே சினிமாவில் உள்ளதாகவும், தனது புகைப்படத்தையோ, பெயரையோ ரசிகர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக பயன்படுத்திட கூடாதெனவும், ரசிகர்கள் தங்களது கல்வி, தொழில், குடும்பம் உள்ளிட்டவற்றில் கவனத்தை செலுத்துவதே தனக்கு மகிழ்வளிக்குமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்காண் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டதற்கு முக்கிய காரணம், தான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் எப்போதும் ஈடுபடப்போவதில்லை என்பதனை வெளிப்படுத்த அஜித் விரும்பியதால் தான் என அவரது தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், அஜித்தை தங்களது கட்சியில் சேர அழைக்கவில்லை எனவும், தனது நிலைப்பாட்டினை அவர் வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது என தமிழிசை விளக்கமளித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க