குப்பைக்கிடங்கில் துண்டு துண்டாக இளம்பெண்ணின் உடல்! அதிர்ச்சியில் காவல்துறை!!

30shares

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றச்சம்பவங்களை குறைத்திடஎத்துணை கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், ஆண்டுதோறும் இந்திய அளவில் பெண்கள் - குழந்தைகளுக்கெதிரான வன்முறை மற்றும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளன என்கின்றன சமீபத்தில் வெளியான தன்னார்வ நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள்.

உண்மை நிலை இவ்வாறிருக்க, இதோ சென்னையில் மற்றுமோர் கொடூர சம்பவம் அரங்கேறியதுள்ளது - அரங்கேற்றப்பட்டுள்ளது. பெருங்குடி பகுதியிலுள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், கோடம்பாக்கம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்த குப்பைகளில் வித்தியாசமான பார்சல்கள் இருக்கவே அதனை திறந்துபார்த்ததில் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த பார்சல்களுக்குள் இளம்பெண் ஒருவரின் உடல் பாகங்கள் சில துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்க அங்கு வந்த காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கிவுள்ளதுடன், கொல்லப்பட்ட இளம்பெண்ணின் இதர உடல்பாகங்களையும் தேடி வருகின்றனர். பலாத்கார முயற்சியின் போது இந்த கொடூர சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாமா என்ற ரீதியிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க