இந்து மத குறியீடுகளை தவறாக சித்தரித்தது சரிதான் - திமுகவிலிருந்து ஓர் குரல்.!

36shares

சென்னை, லயோலா கல்லூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற வீதி விருது திருவிழாவில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த கண்காட்சியில் தேசிய - இந்து மத குறியீடுகள் தவறாக சித்தரிக்கப்பட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்த விவகாரம் சமூக - அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில், மேற்காண் கண்காட்சியை ஒருங்கிணைத்த லயோலா கல்லூரி நிர்வாகத்திற்கான அங்கீகாரத்தினை ரத்து செய்திட வேண்டும், அந்த கண்காட்சியை திறந்துவைத்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக காட்டமான எதிர்ப்பினை வெளியிட்டுவருகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு உண்டாக்கப்பட்ட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதற்காக பாரத மாதாவையும், இந்து மத சின்னங்களையும் தான் பயன்படுத்துவார்களா? ஏன் இஸ்லாமிய, கிறித்தவ மத சின்னங்களை பயன்படுத்த வேண்டியது தானே என சீற்றம் காட்டி வருகின்றனர் இந்து சமயம் சார்ந்தவர்கள்.

இந்த நிலையில், மேற்காண் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுகவின் செய்தி தொடர்பாளர் பிரசன்னா, "லயோலா கல்லூரியில் நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்ட ஓவியங்களில் பிழையேதுமில்லை. ஆர்எஸ்எஸ், பாஜகவின் அடாவடித்தனங்களே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க