அண்டாவில் பால் அபிஷேகம் கேட்ட சிம்புவுக்கு சிக்கல்?

23shares

நடிகர் சிம்பு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, விரைவில் வெளியாகவுள்ள தனது திரைப்பட வெளியீட்டின் போது கட் அவுட், பேனர், பாலபிஷேகம் போன்ற செயல்களை ரசிகர்கள் செய்யாமல் இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று விரைவில் வெளியாகவுள்ள தனது வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்பட வெளியீட்டின் போது அதிகப்படியான கட் அவுட், பேனர்கள் வைக்க வேண்டுமெனவும், அண்டாக்களில் பால் கொண்டுவந்து தனது பேனர்களுக்கு அபிஷேகம் செய்ய வேண்டுமெனவும் காணொளி மூலம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனால் நடிகர் சிம்புவுக்கு எதிராக வழக்கு தொடர தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதுடன், சிம்புவின் மேற்காண் பேச்சுக்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நடிகர் சிம்புவை வைத்து சமூகம் சார்ந்த திரைப்படங்களை இயக்க போகிறேன் எனவும், அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனவும் நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க