பிரம்ம முகூர்த்தம்.. பிரத்யங்கரா தேவிக்கு பூஜை ; எடப்பாடியை கவிழ்க்க ஓபிஎஸ் செய்த யாகம்.!

13shares

பிரம்ம முகூர்த்தம் - புகை மண்டலத்தில் தலைமைச்செயலகம் :

விடுமுறை தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரம் என அறியப்படும் அதிகாலை 3 முதல் 5 மணி வரை தமிழக அரசின் தலைமைப்பீடமான தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் அறையிலிருந்து ஒரே புகை மூட்டம் கிளம்ப, அங்கு பணியிலிருந்த சிலருக்கும், சுற்றுவட்டாரத்தில் உள்ளோருக்கும் சந்தேகம் எழுந்தது? உள்ளே என்ன நடக்கிறதென்று.

மேற்கண்ட சந்தேகத்திற்கு விடியல் வேளைக்கு பின்னர் தான் விடை கிடைத்தது. ஆம், வாஸ்து பரிகார பூஜை, கண் திருஷ்டி பரிகார பூஜை, வத்தல் மிளகாய் கொண்டு பிரத்யங்கரா தேவிக்காக யாகம் என தனது துணை முறையில் அதிரடி பூஜைகளை அரங்கேற்றியிருக்கிறார் ஓபிஎஸ். எதற்காக, என்ன நோக்கத்துடன் நடத்தப்பட்டது இந்த பூஜைகள் என்றால் மீண்டும் ஓபிஎஸ் முதல்வர் ஆவதற்காகத்தான் என்கின்றன தலைமைச்செயலக வட்டாரங்கள்.

முதல்வர் இல்லாத நேரத்தில் :

ஓபிஎஸ் மேற்கண்ட பூஜைகளையெல்லாம் அதிரடியாக அரங்கேற்றிக்கொண்டிருக்க, தனது அமைச்சரவை சகாக்களுடன் எடப்பாடி பழனிசாமி விராலிமலை ஜல்லிக்கட்டை துவக்கிவைக்க சென்றுகொண்டிருந்தார் என்பது கூடுதல் தகவல்.

எடப்பாடி கவிழ்த்துவிட்டு முதல்வராக வேண்டிதான் இந்த பூஜைகளையெல்லாம் ஓபிஎஸ் அரங்கேற்றினாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அரசு விதிகளின் படியே அரசு கட்டிடத்தில் பணியாளர் - பொது ஊழியர் ஒருவர் மதம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. அதுவும் விடுமுறை தினமான ஞாயிற்று கிழமையில், அதிகாலை வேளையில் அங்கு பூஜைகளை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? என்ற கேள்வி பொதுமக்களுக்கு எழாமல் இல்லை.

எடப்பாடியின் சந்தேக வட்டத்தில் :

அதே சமயம், மேற்காண் விவகாரம் குறித்து விளக்கமளிக்கும் ஓபிஎஸ், "கரையான் அரித்த பகுதியை சரி செய்ததற்காகவே பூஜை நடத்தப்பட்டது " என்கிறார். எது எப்படியோ, தர்ம யுத்தம் செய்கிறேன் என பேசிக்கொண்டே தினகரனுடன் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ், தலைமைச் செயலகத்தில் பூஜை நடத்தி இரண்டாவது முறையாகவும் எடப்பாடியின் சந்தேக பார்வையில் சிக்கியுள்ளார் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம்.

இதையும் தவறாமல் படிங்க