எம்ஜிஆருக்கும், புலிகளுக்கும் இடையேயான உறவு எத்தகையது? பழ.நெடுமாறன் நினைவு கூறும் நிகழ்வுகள்.!

171shares

விடுதலைப்புலிகளையும், அந்த இயக்கத்தினது தலைமையையும் வெகுவாக நேசித்தார் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக நிறுவருமான எம்ஜிஆர். அதற்கு எம்ஜிஆருக்கு ஆயிரம் அரசியல் ரீதியிலான காரணங்கள் இருந்திருக்கலாம் என சிலர் கூறலாம். ஆனால், அவற்றையெல்லாம் கடந்து உணர்வு ரீதியான தார்மீக ஆதரவினை அவர் புலிகளுக்கு அளித்து வந்தார் எம்ஜிஆர் - புலிகளுக்கு இடையேயான உறவினை விவரிக்கும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள்.

அதற்கு உதாரணமாக பல சம்பவங்களை கூறலாமென தெரிவிக்கும் நெடுமாறன், எம்ஜிஆர் - புலிகள் மீது கொண்டிருந்த பற்றினை பின்வருமாறு விவரிக்கிறார். "தமது இறுதி ஆட்சி காலத்தின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ரூ.5 கோடி நிதியளிக்கப்போவதாக சட்டமன்றத்திலேயே அறிவித்தார் எம்ஜிஆர். ஏற்கனவே, புலிகள் இயக்கத்தினை தமிழகத்தில் சுதந்திரமாக உலாவ விடுவதாக தமிழக அரசின் மேல் அதிருப்தியில் இருந்த மத்திய அரசுக்கு எம்ஜிஆரின் இந்த செய்கை ஆவேசத்தை உண்டாக்கியது.

எம்ஜிஆரின் அறிவிப்பினை கேட்ட இலங்கை அரசாங்கமும் மத்திய அரசிடம் இதை தடுத்த நிறுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கவே, புலிகளுக்கு உதவிட வேண்டாமென தகவல் அனுப்பினார் ராஜீவ். முன்னமே மத்திய அரசின் மீது அதிருப்தியில் இருந்த எம்ஜிஆர், நான் இனி புலிகளுக்கு நிதியளிக்க போவதில்லை ; முன்னமே அளித்துவிட்டேன் என்றார்.

ஆனால், உண்மையில் அவ்வாறு தெரிவித்த இரு நாட்களுக்கு பின்புதான் நிதியளித்தார் எம்ஜிஆர். இந்த தகவலை தமது உதவியாளர் பார்த்தசாரதி அய்யங்கார் மூலம் அறிந்துகொண்ட ராஜீவ், உடன் எம்ஜிஆரை டெல்லிக்கு அழைத்தார்.அங்கே, ராஜீவ் முன்னிலையில் எம்ஜிஆரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துள்ளனர் நடுவண் அரசு அதிகாரிகள்.

இத்தகைய தடைகள் மற்றும் அழுத்தங்களையெல்லாம் கடந்தே அவர் புலிகளுக்கு உதவினார்" என தமது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார் பழ.நெடுமாறன்.

இதையும் தவறாமல் படிங்க