பன்றிகள் வீசும் சேற்றைப் பற்றி கவலையில்லை - கமலை விளாசிய முரசொலி.!

22shares

பாஜகவின் அழுத்தத்தினால் நடிகர் கமல்ஹாசன் தன்னிலை மறந்து பிதற்றிக்கொண்டிருப்பதாக காட்டமான விமர்சனத்தை கமல் மீது முன்வைத்துள்ளது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி.

நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலில் ஈடுபடப்போவதாக கூறி மக்கள் நீதி மய்யம் என்ற அமைப்பினை ஏற்படுத்தியுள்ளார். கட்சியினை துவக்கியது முதல் அதிமுக அரசின் மீது காட்டமான விமர்சனங்களை தொடுத்துவந்த கமல் திமுக குறித்து வாய் திறக்காமல் இருந்துவந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊழல் கறைபடிந்த திமுக, அதிமுக ஆகிய கட்சிகளோடு தாம் கூட்டணி வைக்கப்போவதில்லை என பேசியிருந்தார்.

கமலின் மேற்கண்ட பேச்சு திமுக தரப்பை கொந்தளிக்க வைத்துள்ளது. அதன் எதிரொலியாக திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் இன்று வெளிவந்துள்ள கட்டுரையில், நரித்தனத்தில் பெயர் போன ரத்த வார்ப்பு கமல் என தொடங்கி கமலை விளாசியுள்ளது முரசொலி.

திமுகவை நேரடியாக எதிர்க்க பாஜக கமல் போன்ற நடிகர்களை களமிறக்கி அழுத்தம் கொடுக்கிற காரணத்தினால் அவர்கள் இதுபோல பேசுவதாக எழுந்த விமர்சனத்தை கோடிட்டு காட்டியுள்ள முரசொலி, பத்மஸ்ரீ பெற்றபோதும், பாராட்டு விழாவுக்கு கலைஞரை அழைத்தபோதும், ஆட்சியில் இருந்தபோதும் ஊழல் கட்சியாக தெரியாத திமுக, ஆட்சியை இழந்து 7 ஆண்டுகள் ஆன நிலையில் ஊழல் காட்சியாகவிட்டதா? என கமலை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளது முரசொலி.

மேலும், புலி வேட்டைக்கு செல்பவர்கள் பன்றிகள் வீசும் சேற்றைப்பற்றி கவலைகொள்ள கூடாதென்பார்கள். அதைப்போலவே கமலின் விமர்சனத்தை கடந்துபோவதாக மிக காட்டமான எதிர்வினையாற்றியிருக்கிறது முரசொலி.

முரசொலியில் மேற்காண் அதிரடி தாக்குதலால் அதிர்ந்துள்ளதாம் மக்கள் நீதி மய்ய தரப்பு.

இதையும் தவறாமல் படிங்க