காறி உமிழ்ந்து வெளியேற்றுவோம் - கட்சியினரை எச்சரித்த சீமான்.!

140shares

கட்சி கட்டுப்பாட்டினை மீறி செயல்படுகிற யாராக இருந்தாலும் கட்சி உங்களை காறி உமிழ்ந்து வெளியேற்றுமென தனது கட்சி தொண்டர்களை எச்சரித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தன்னுயிரை ஈகம் செய்த முத்துக்குமாரின் நினைவினை போற்றும் விதத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த 9 ஆம் தேதி திருவண்ணாமலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் "உங்களுக்கு மேட்டிமைத்தனமும், மேதமைத்தனமும் இருக்கலாம். அதற்காக கட்சி தலைமைக்கு கருத்து சொல்லிக்கொண்டிருக்க கூடாது. இங்கே நான் மட்டும் தான் முன்னே நிற்பேன். உங்களுக்கென நீங்கள் செயல்பட விரும்பினால் கட்சியிலிருந்து வெளியேறுங்கள். இல்லாவிட்டால் கட்சி உங்களை காரி உமிழ்ந்து வெளியேற்றுமென" ஆவேசமாக பேசினார்.

முன்னதாக, தமிழர்களை வந்தேறிகள் என பேசிய கம்ம நாயுடு எழுச்சி பேரவை என்ற அமைப்புக்கு நாம் தமிழர் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுள் ஒருவராக இருந்த துரைமுருகன் காட்டமாக எதிர்வினையாற்றியிருந்ததும், அதனை சுட்டிக்காட்டி அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சமயத்தில் தமிழர்களை வந்தேறிகள் என சாடியவர்களை வெளிப்படையாக அறிக்கை மூலம் கண்டிக்காத சீமான், வந்தேறிகள் என சாடியவர்களுக்கு எதிர்வினையாற்றிய துரைமுருகனை கட்சியிலிருந்து நீக்குவதா? என்ற விமர்சனம் கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க