ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்திற்கு ராகுல் ஆதரவு.!

6shares

கடந்த 2014 மக்களவை தேர்தல் சமயத்தில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்ற அம்மாநில மக்களின் கோரிக்கையை ஏற்றிருந்தது பாஜக. ஆனால், மத்தியில் அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஆந்திர மக்களின் கோரிக்கையானது கிடப்பில் போடப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியதுடன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டுமென ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

இந்நிலையில், இன்று தர்ம போராட்ட தீக்ஷா என்ற பெயரில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிடக்கோரி டெல்லியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகிறார் சந்திரபாபு நாயுடு. அவரோடு அவரது கட்சியினரும் எம்எல்ஏ, எம்.பிக்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொள்ளும் இடத்திற்கு வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல், சந்திரபாபு நாயுடுவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன், ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்ற தவறிவிட்டார் எனவும், மோடி நம்பகத்தன்மை அற்றவர் எனவும் கடுமையாக சாடினார்.

இதையும் தவறாமல் படிங்க