வெள்ளி புடியருவா வெடலப்புள்ள கையறுவா.. கிராமிய பாடல் பாடி அசத்திய சீமான்.!

28shares

தமிழ், தமிழர், தன்னாட்சி என தனது கட்சி மேடைகளிலும், பொது நிகழ்வுகளிலும் தொடர்ந்து முழங்கிக்கொண்டிருப்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன் காரணத்தினால் அவரை இறுக்கமான ஒருவராகவே பெரும்பான்மையானோர் உருவகப்படுத்துவதுண்டு. ஆனால், நண்பர்களிடம் பழகும் சமயங்களில் சீமானின் பேச்சில் நகைச்சுவை ஊற்றெடுக்கும் என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். ஆம், அதேபோல் நன்றாக பாடும் திறனும் கைவரப்பட்டவர் சீமான் என அவரோடு திரைத்துறையில் பணியாற்றியவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்படி சீமானின் மென்மையான பக்கத்தினை வெளிக்காட்டும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கும்பகோணத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரியின் ஆண்டு விழா அமைந்தது. நிகழ்வில் கலந்துகொண்டு பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் முன்னர் உரையாற்றிய சீமான் தமிழின் தொன்மங்கள்,கலாச்சாரங்கள், மக்களிசை, கிராமியப்பாடல்கள் குறித்து பேசிக்கொண்டே வருகையில் திடீரென குரலெடுத்து கிராமிய பாடல்களை பாடத்துவங்க மாணவிகளின் கரகோஷத்தால் அதிர்ந்து விழா அரங்கம்.

தொடர்ந்து மாணவர்களுக்கான கருத்துக்களை பேசி தனது உரையை நிறைவு செய்தார் சீமான். ஆனாலும், சீமானின் குரலில் தாங்கள் கேட்ட கிராமியப்பாடல்களிலேயே லயித்திருந்ததாக தெரிவிக்கின்றனர் அக்கல்லூரி மாணவர்கள்.

இதையும் தவறாமல் படிங்க