திருக்குறளால் சொற்போர்! அதிர்ந்தது இந்தியா

45shares

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் திருக்குறள் மோதிக் கொண்டுள்ள சமபவம் இடம்பெற்றுள்ளது.

வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு, எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் என்ற திருக்குறலாள் பதில் அளித்துள்ளார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

தமிழக திருப்பூரில் நேற்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு என்ற திருக்குறளை கூறி கட்சியினர் மத்தியில் உரையாற்றியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற திருக்குறளை தமது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

இன்றைய ஆட்சியாளர்களை கருத்தில் கொண்டு, திருவள்ளுவர் அன்றே இதை சொன்னாரோ? எனவும் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை திருப்பூர் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடல் முதல் வானம் வரை காங்கிரஸ் கட்சி பல ஊழல்களை செய்துள்ளது என விமர்சித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன் கடந்த காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்து அக்கறை செலுத்தவில்லை எனவும் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க