திருமாவின் உண்ணாவிரத போராட்டத்தையும் தடுக்க முயற்சித்தன திராவிட கட்சிகள்.!

22shares

நாம் தமிழர் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களுள் ஒருவரும், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டவருமான கலைக்கோட்டுதயம், திராவிட கட்சிகள் தமிழர்களை எப்போதும் பிளவு படுத்தவே முயற்சிக்கின்றன என குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது, "தாய்த்தமிழ் உறவுகள் ஈழத்தில் சிங்கள அரசால் கொன்றொழிக்கப்படுகையில் தமிழகத்தில் மாத்திரம் ஓர் தமிழனின் தலைமையில் ஆட்சி நடந்திருக்குமேயானால் அந்த பேரவலத்தை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருப்போமா? நாதியற்றவர்களாகிபோனமே. அந்த நிலைக்கு முழுது முற்றிலுமாக இந்த மண்ணை ஆண்ட திராவிட கட்சிகள் தான் காரணம்" என தெரிவித்துள்ளார்.

மேலும், "இறுதிக்கட்ட போர் சமயத்தில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனக்கோரி சென்னையில் (சனவரி 15 முதல் நான்கு நாட்கள் 2009) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா. அப்போது சீமானெல்லாம் கிடையாது. சுமார் நான்கு நாட்கள் திருமாவின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் ஓர் கொதிப்பலை உண்டான காரணத்தினால் திருமாவின் உண்ணாவிரத போராட்டத்தையும் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து தடுத்தார்கள்" எனவும் அப்போதைய காலகட்டத்தை விவரிக்கிறார் கலைக்கோட்டுதயம்.

மேலும், நமக்குள்ளாக உள்ள சாதி பாகுபாடுகளை களைந்து நாம் தமிழ்ச்சாதியாக ஒன்றானால் தவிர நமக்கான உரிமைகள் காக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார் கலைக்கோட்டுதயம்.

இதையும் தவறாமல் படிங்க