பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை பற்றி பேசாதது ஏன்? திமுகவை திணறடிக்கும் தேவேந்திர குல இளைஞர்கள்.!

15shares

தமிழர்களில் தலைத்தமிழர்கள் நாங்கள், மருத நிலத்து வேளாண் குடிகள் எங்களை ஒடுக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து வெளியேற்றி வரலாற்று தரவுகளின் வழி தேவேந்திர குல வேளாளர்கள் என அறிவிக்க - அடையாளப்படுத்திட வேண்டுமென தொடர்ச்சியான பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன அச்சமுதாயத்தினை பிரதிநிதித்துவப்படுதும் புதிய தமிழகம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மள்ளர் மீட்பு களம் உள்ளிட்டவை.

இங்கே தங்களை உயர்ந்த சாதியினர் என கூறிக்கொள்கிற அனைவரும் இடஒதுக்கீட்டு சலுகைகளை அனுபவிக்கின்றனர். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே ஏதோ இடஒதுக்கீட்டால் பயன்பெறுவதனை போல பிம்பத்தினை ஏற்படுத்துகின்றனர்.

இந்த அவலங்களை ஒழிக்கவே, வரலாற்று தரவுகளின் படி வேளாண்குடி மக்களான எங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என அரசுகள் அங்கீகரிக்க வேண்டுமென்பதுவே மேற்காண் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கை. ஆனால், திமுக மேற்காண் கோரிக்கை குறித்து பேசாமல் அமைதி காத்து வருகிறது.

இந்த நிலையில், திமுக தற்போது நடத்தும் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொள்ளும் ஸ்டாலினிடம், "மதுரை விமான நிலையத்திற்கு இடமளித்தவர்கள் நாங்கள். உண்மை நிலை இப்படியிருக்க அந்த விமான நிலையத்திற்கு மாற்று சமுதாயத்தவரின் பெயரை சூட்டுவேன் என அறிவிக்க நீங்கள் யார்? அது மதுரை விமான நிலையம் என்றே இருக்கட்டும். யார் பெயரும் வேண்டாம். எங்கள் இரு சமூகத்திற்குள்ளாக பிரிவினையை தூண்டுகிறீர்களா?" என கொந்தளிக்கின்றனர் தேவேந்திர குல வேளாளர் சமுதாய இளைஞர்கள்.

மேலும், "பூர்வீக அடையாளத்தினை கோரும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்காத நீங்கள் தேர்தலுக்காக மட்டும் எங்கள் பகுதிக்கு வருவதேன்?" எனவும் ஆவேசம் காட்டுகின்றனர். இதன் காரணமாக அதிர்ந்துள்ளது திமுக தலைமை.

இதையும் தவறாமல் படிங்க