தன்னை மட்டும் முன்னிறுத்துகிறாரா சீமான்.. வெடித்து குமுறும் நாம் தமிழர் தம்பிகள்.!

60shares

எங்கள் மண்ணுக்கும், மக்களுக்குமான தத்துவத்தினை முன்னிறுத்தியே அரசியல் பயணம் மேற்கொள்கிறோம். ஆனால், கட்சிக்குள் சமீபத்தில் நிகழ்ந்துவரக்கூடிய சம்பவங்கள் மகிழ்ச்சியளிக்க கூடியதாக இல்லை என்கின்றனர் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்.

கம்ம நாயுடு எழுச்சி பேரவை என்ற அமைப்பு சமீபத்தில் கோவையில் நடத்திய மாநாட்டில் தமிழர்களை வந்தேறிகள் என தூற்றினார்கள் சிலர். அவர்களை வெளிப்படையாக அறிக்கை மூலம் கண்டிக்காத தலைமை, தமிழர்களை வந்தேறிகள் என தூற்றியவர்களுக்கு எதிர்வினையாற்றிய துரைமுருகனை கட்சியை விட்டே நீக்குகிறது. இந்த நடவடிக்கையே எங்களால் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலையில் நடைபெற்ற ஈகைத்தமிழன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், கட்சியை மீறி நடந்தால் கட்சி உங்களை காறி உமிழ்ந்து வெளியேற்றுமென பேசுகிறார். மேலும், தலைவனாக நான் இருக்கிறேன். நாங்கள் மேற்கொள்வதுதான் இறுதி முடிவு. உங்களுக்கான தனியான கருத்துக்கள் இருப்பின் கட்சியை விட்டு வெளியேறிவிடுங்கள் என பேசுகிறார்.

காலத்தின் தேவையான தமிழ்த்தேசிய தத்துவத்தினை முன்னெடுப்பவர்கள் நாங்கள் என கூறிக்கொள்ளும் சீமானின் இம்மாதிரியான போக்குகள் ரசிக்க கூடியதாக இல்லை. நாங்களும் இந்த கட்சிக்காக உழைப்பவர்கள் தானே. குறைந்தபட்சம் எங்கள் கருத்துக்களுக்கு செவிமடுத்து பரிசீலிக்கலாம் அல்லவா?

திராவிட கட்சிகளில் உள்ளவர்கள் போல் அல்லாமல் தமிழர்களை வந்தேறிகள் என்றவர்களுக்கு எதிர்வினையாற்றிய நபருக்கு நேர்ந்த கதிதான் எல்லாருக்கும் ஏற்படுமா? என தலைமை மீதான தங்களது அதிருப்தியினை முன்வைக்கின்றனர் நாம் தமிழர் தம்பிகள். கவனத்தில் கொள்ளுமா நாம் தமிழர் தலைமை?

இதையும் தவறாமல் படிங்க