பிப்ரவரி 14.. காதலர் தினமல்ல ; கழிசடைகள் தினம் - களத்தில் இறங்கிய இந்து அமைப்புகள்.!

20shares

ஆண்டுதோறும் இம்மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் விமர்சையாக கொண்டாடப்படும். சென்னையின் நட்சத்திர விடுதிகளில் விடிய விடிய ஆட்டம், பாடங்கள் அரங்கேறும். அதேபோல் ஆண்டுதோறும் தமிழகத்திலும், இந்தியா முழுமைக்கும் காதலர் தினம் கொண்டாட தடை விதிக்க வேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலிக்கும்.

தமிழர்களின் கலாச்சார, பண்பாட்டு தொன்மங்களுக்கு எந்த விதத்திலும் சற்றும் தொடர்பில்லாத இம்மாதிரியான தினங்களை அனுசரிக்க அனுமதிப்பதன் மூலம் நாம் நமது சுயத்தை இழந்துபோகிறோம். நமது கலாச்சாரம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆகவே, தமிழகம் முழுவதும் காதலர் தினம் அனுசரிக்க தடை விதிக்க வேண்டும் இல்லாவிட்டால் அன்றைய தினம் ஒன்றாக சுற்றித்திரியும் ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைப்போம் என களத்தில் இறங்கியுள்ளன இந்துமுன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள்.

இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள இந்து மக்கள் கட்சியின் அர்ஜீன் சம்பத், "தூய அன்பின் அடையாளம் தான் காதலென வெளிப்படுத்துகின்றன நமது இலக்கியங்கள். அத்தகைய காதலை, கலப்பு திருமணத்தை எதிர்ப்பவர்கள் அல்ல நாங்கள். ஆனால், காதலர் தினம் என்ற பெயரால் கண்ணகி பிறந்த மண்ணில் அரங்கேற்றப்படும் ஆபாச சீரழிவுகளை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, அரசு இத்தகைய கொண்டாட்டங்களை தடை விதைக்க வேண்டுமென" ஆவேசம் காட்டுகிறார்.

முன்னதாக, பிப்ரவரி 14 காதலர் தினம் அல்ல ; கழிசடைகள் தினம் என இந்து அமைப்புகள் சார்பில் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க