ரஜினி ரசிகர் மீது நாம் தமிழர் கட்சியினர் கொலைவெறி தாக்குதல்? சேலத்தில் பரபரப்பு.!

81shares

பிற மொழியாளர்களையும், நடிகர்களையும் இந்த மண்ணை ஆள அனுமதித்த காரணத்தினாலேயே இன்று எம் தமிழினம் சொல்லொணா இன்னல்களுக்கு ஆளாகிவருகிறது. இனியும் அப்படியான நிலை ஏற்படக்கூடாது. எங்களின் தார்மீக உரிமையானதலைமையேற்கும் உரிமையினை யாருக்கும் விட்டுத்தர முடியாது என தொடர்ச்சியாக தமிழகத்து வீதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

மேற்காண் காரணத்தினாலேயே ரஜினி, விஷால் உள்ளிட்ட நடிகர்களின் அரசியல் வருகையையும் அவர் மூர்க்கமாக எதிர்த்துவருகிறார். இதற்கு ரஜினி ரசிகர்கள் தரப்பிலிருந்தும் சமூக வலைத்தளங்களில் எதிர்வினையாற்றப்பட்டுவருகிறது. அப்படியான விமர்சனத்தை சீமான் மீது வைத்த காரணத்தினால் சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ரஜினி பழனி என்பவர் மீது நாம் தமிழர் கட்சியினர் கொலைவெறித்தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு ஆளான பழனி நாம் தமிழர் கட்சியினரே தம்மை தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

தன் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த பழனி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை மேற்காண் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறது.

இதையும் தவறாமல் படிங்க