இந்தியாவை உலுக்கிய தாக்குதல்! உளவுத்துறையினரிற்கு கிடைத்த திடுக்கிடும் தகவல்...

  • Dias
  • February 17, 2019
1207shares

காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலை, பாகிஸ்தான் மருத்துவமனையில் இருந்து பயங்கரவாதி மசூத் அசார் உத்தரவிட்டதாக, உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் விமானத்தை கடத்தி வைத்து, அரசுக்கு மிரட்டல் விடுத்ததால், சிறையிலிருந்த தீவிரவாதி மசூத் அசார் விடுவிக்கப்பட்டான்.

அன்றிலிருந்து பாகிஸ்தாலின் பதுங்கி வாழ்வதுடன், ஜெய்ஷ் முகமது என்ற அமைப்பையும் நடத்தி வருகிறான்.

காஷ்மீரில் தனது உறவினரை இந்திய ராணுவம் கொன்றதால், அதற்கு பதிலடியாக, தற்போது காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 44 பேரைக் கொல்வதற்கு அவர் திட்டமிட்டு செயல்பட்டுள்ளான் என்றும், தற்சமயம் ராபல்பிண்டி யில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தங்கி உள்ளான் என்றும் இந்திய உளவுத்துறையின் தரப்பில் கண்டறிந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க