பாஜக - அதிமுக கூட்டணி: இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

16shares

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அணி சேர்க்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகள். தமிழகத்தைப்பொறுத்தமட்டில் மாநிலத்தில் ஆட்சியிலுள்ள அதிமுகவும், மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜகவும் இணைந்து கூட்டணி அமைக்ககூடுமென கருதப்படுகிறது. இக்கட்சிகளோடு தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறக்கூடுமென செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வரவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்போது, அதிமுக - பாஜக இடையேயான நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படக்கூடுமெனவும், இந்த அணியில் மேலும் சில கட்சிகள் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

முன்னதாக, பாஜகவின் சார்பில் மக்களவை தேர்தலுக்கான தமிழக பொறுப்பாளராக அக்கட்சியால் நியமிக்கப்பட்டுள்ள பியூஸ் கோயல் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்ததுவும், அதிமுகவின் முன்னணி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க