கமலை பார்த்தா நாங்கள் கட்சி தொடங்கினோம்; வெடித்துக்கிளம்பும் உதயநிதி!

27shares

நடிகர் கமல்ஹாசனை பார்த்தா நாங்கள் கட்சி தொடங்கினோம். எந்த வித ஆதாரங்களுமின்றி திமுக மீது குற்றம் சுமத்துவரேயானால் கமலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படுமென தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின்.

நடிகர் கமல்ஹாசன், தான் அரசியலில் ஈடுபடப்போவதாக கூறி மக்கள் நீதி மய்யம் என்ற அமைப்பினை ஏற்படுத்தியுள்ளார். கட்சியினை துவக்கியது முதல் அதிமுக அரசின் மீது காட்டமான விமர்சனங்களை தொடுத்துவந்த கமல் திமுக குறித்து வாய் திறக்காமல் இருந்துவந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊழல் கறைபடிந்த திமுக, அதிமுக ஆகிய கட்சிகளோடு தாம் கூட்டணி வைக்கப்போவதில்லை என திமுக, அதிமுகவை சாடியிருந்ததுடன், தம்மை பார்த்துதான் திமுக கிராம சபை கூட்டங்களை நடத்துவதாகவும் பேசியிருந்தார்.

கமலின் மேற்கண்ட பேச்சு திமுக தரப்பை கொந்தளிப்படைய செய்த நிலையில், அறியாமையால் கமல் உளறிக்கொட்டுவதாக கமலை விமர்சித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த நிலையில், கமல் குறித்து மேலும் பேசியுள்ள உதயநிதி, "கமலை பார்த்தா நாங்கள் கட்சி தொடங்கினோம்.காலம் காலமாக திமுக ஊராட்சி சபை கூட்டங்களை நடத்திவருகிறது. இது எதுவும் தெரியாமல் திமுகவை கமல் விமர்சிப்பாரேயானால் அவருக்கு திமுக சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் நிர்வாக இயக்குனராக உள்ள முரசொலி பத்திரிகையில் நடிகர் கமலை விமர்சித்து காத்திரமான கட்டுரைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க