நட்சத்திர விடுதியில் பேச்சுவார்த்தை; உறுதியானது அதிமுக - பாமக கூட்டணி!

21shares

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசையும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த பாமக, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜக - அதிமுக அணியில் இணைந்திட கூடுமென கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவந்தன.

ஆனால், தொடர்புடைய தரப்புகள் அதனை மறுத்துவந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வரவுள்ளதாகவும், அப்போது அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணி இறுதி செய்யப்படும் எனவும் நேற்றைய தினம் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், சென்னை நந்தனம் அருகேயுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அதிமுக - பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது, இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, பாமக காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறக்கூடுமென காங்கிரஸ் செயல் தலைவர் தெரிவித்திருந்ததும், பாமக இடம்பெறும் கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்க மாட்டோமென விசிக தலைவர் திருமா அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க