இது மக்கள் நல கூட்டணி; நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்!

31shares

பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட தங்களது கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி மக்கள் நலக்கூட்டணி எனவும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணியே வெற்றிபெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

நீட் நுழைவுத்தேர்வு, சேலம் எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பல விவகாரங்களில் தமிழக அரசை மிக கடுமையாக சாடிவந்தவர்கள் பாமக நிறுவனர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணியும். தமிழக அமைச்சர்கள் சிலரை தனிப்பட்ட முறையிலும் சாடிவந்தார் அன்புமணி. இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் அணியில் அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம்பெறக்கூடுமென செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இன்று அதிமுக - பாமக கூட்டணியை உறுதி செய்துள்ளனர் இரு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள்.

சென்னை, தனியார் விடுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் ராமதாஸ், "அதிமுக, பாமக இடையேயான கூட்டணி மக்கள் நலக்கூட்டணி எனவும், மக்களவை தேர்தலில் புதுவை உள்ளிட்ட நாற்பது தொகுதிகளிலும் தாங்கள் வெல்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்படக்கூடுமென செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க