சந்தர்ப்பவாதிகள் இவர்கள்; பாமக, அதிமுக கூட்டணியை விளாசும் திருமாவளவன்!

13shares

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக பாஜக அணியில் அதிமுக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம்பெறக்கூடுமென கடந்த சில நாட்களாகவே தகவல்கள் கசிந்துவந்த நிலையில், அதிமுகவின் தலைவர்களை நேரில் சந்தித்து தங்களுக்கு இடையேயான கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கிறார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு சுமார் 7 தொகுதிகள் ஒதுக்கப்படக்கூடுமெனவும் தெரிகிறது. இந்த நிலையில், அதிமுக - பாமக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "பார் உள்ளளவும், பைந்தமிழ் உள்ளளவும், கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் தேசிய, திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லையென அறிவித்தவர்கள் பின்னாளில் அவர்களுடனேயே கூட்டணி வைத்தார்கள். தற்போதும் ஊழல் அரசு என தமிழக அரசை கடுமையாக சாடி வந்தவர்கள், யாரை ஊழல்வாதிகள் என்றார்களோ அவர்களுடனேயே பேரம் பேசி கூட்டணி வைத்திருப்பதன் மூலம் தாங்கள் அப்பட்டமான சந்தர்ப்பவாதிகள் என வெளிக்காட்டியுள்ளனர்" என பாமகவையும், அதிமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக, மத வாதத்தை உயர்த்தி பிடிக்கும் பாஜவுடனும், சாதிய வாதத்தினை உயர்த்தி பிடிக்கும் பாமாவுடனும் எப்போதும் கூட்டணி இல்லையென திருமா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க