முடிந்தது கூட்டணி பேச்சுவார்த்தை: பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக!

168shares

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து சந்திக்குமெனவும், அதிமுக தலைமையிலான அணியில் இணைந்துள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது அதிமுக.

நாடாளுமன்ற தேர்தலுக்காக அணி சேர்க்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகள். தமிழகத்தைப்பொறுத்தமட்டில் மாநிலத்தில் ஆட்சியிலுள்ள அதிமுகவும், மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜகவும் இணைந்து கூட்டணி அமைக்ககூடுமென கருதப்பட்ட நிலையில், இன்று மேற்காண் இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கிடையே சென்னை, தனியார் விடுதியொன்றில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அதிமுக தலைமையிலான அணியில் இணைந்துள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் நடைபெற்ற அனைத்து சிக்கல்களுக்கும் மத்திய பாஜக அரசே காரணம் எனவும், தற்போதைய தமிழக அரசை வழிநடத்துவதும் மத்திய அரசுதான் எனவும் அரசியல் நோக்கர்கள் தொடர்ச்சியான விமர்சனத்தை முன்வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க