இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

100shares

பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்க உள்ளது.

24 ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

விமானத் தொழில் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தொழிலை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் இந்த கண்காட்சியில், பல்வேறு வகையான விமானங்களின் தொழில்நுட்ப சாகசம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒத்திகையில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், எலஹங்கா தளத்தில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற சூரிய கிரண் பிரிவைச் சேர்ந்த 2 போர் விமானங்கள் பயிற்சியின்போது எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இரண்டு விமானங்களும் தரையில் மோதி தீப்பிடித்தன. இதனால் அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதையும் தவறாமல் படிங்க