மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்! திருமணத்திற்கு சென்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

178shares

மணமகனின் கழுத்தில் மணமகள் தாலி கட்டிய சம்பவம் ஒன்று இந்தியா கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

பசவண்ணா கொள்கைகளை பின்பற்றும் சமூகத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு சமூக சீர்திருத்த திருமணம் செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் லிங்காய சமயத்தை தோற்றுவித்தவர் பசவண்ணா. இவரது கொள்கைகளை பின்பற்றும் குடும்பத்தினர் பலர் உள்ளனர்.

அவர்கள் 12-ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றி வருகிறார்கள். அதன்படி திருமணத்தின் போது வேத மந்திரங்கள் ஓதமாட்டார்கள். கன்னியாதானம், அட்சதை தூவுவது போன்றவற்றை அவர்கள் செய்ய மாட்டார்கள்.

மேலும் மணமகள் கழுத்தில் மாப்பிள்ளை தாலி கட்ட மாட்டார். அதற்கு பதில் மாப்பிள்ளை கழுத்தில் மணப்பெண் தாலி கட்டுவார். இந்த நிலையில் விஜயபுரா மாவட்டம் நாலத்த வாடா பட்டணம் கிராமத்தில் பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்றும் சமூகங்களை சேர்ந்தவர்கள் பிரபுரா- அங்கிதா, அமித் -பிரியா ஆகிய இரண்டு ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்தனர்.

அதன்படி நேற்று திருமண விழா நடந்தது. இதில் மணமகன்கள் கழுத்தில் மணப்பெண்கள் தாலி கட்டினர்.

திருமண நிகழ்ச்சிக்கு வந்த உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு பசவண்ணரின் தத்துவங்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்த சம்பவத்தினால் திருமணம் நிகழ்விற்கு சென்ற பலர் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க