தினகரனுடன் இணைகிறாரா.. தனித்து களம் காண்கிறாரா வேல்முருகன்?

15shares

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் அணி சேர்க்கைகள் ஒரு வழியாக முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. திமுக அணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என கட்சிகள் வரிசைகட்டி நிற்க, அதிமுக அணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து நிற்கின்றன.

இரு அணிகளிலேயும் சற்றேறக்குறைய இடப்பகிர்வு பேச்சுவார்த்தைகள் முடிவு செய்யப்பட்டுவிட்ட சூழலில், இன்னும் சில தினங்களில் 40 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிடுவதற்கு இரு அணிகளின் தலைமைகள் மும்முரம் காட்டுகின்றன.

அதே சமயம், தங்களால் பதவியில் அமர்த்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி - ஓபிஎஸ் தரப்பு தங்களை கட்சி - ஆட்சியிலிருந்து வெளியேற்றியது மட்டுமின்றி, மத்திய பாஜக அரசுடன் கூட்டு சேர்ந்துகொண்டு எண்ணற்ற சிக்கல்களை தங்களுக்கு ஏற்படுத்துவதனை சகிக்க இயலாத சசிகலா - தினகரன் தரப்பு, எப்படியேனும் அதிமுக கூடாரத்தை வீழ்த்திவிட முயலுகிறது.

காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளில் 19 தொகுதிக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலோடு கூட இடைத்தேர்தல் நடத்தப்படுமேயானால் அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க முயலும் தினகரன், துரோகி என்பன போன்ற வார்த்தைகளால் பாமகவினரால் அதிகளவு விமர்சிக்கப்பட்டுவருகிற தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரோடு கூட்டு சேர உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின.

ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தை சரிவராது காரணத்தினால் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து களம் காண கூடுமென தெரிகிறது. தங்களுக்கும் வேல்முருகன் கட்சிக்கும் இடையே கூட்டணி பேச்சு நடைபெற்றதையும், அதில் முடிவு எட்டப்படத்தையும் சூசகமாக செய்தியாளர்களுக்கு தெரிவித்துவிட்டார் தினகரன்.

இதையும் தவறாமல் படிங்க