நன்றியுள்ள நாய்: நன்றி கெட்ட மனிதர்கள்! இந்த சம்பவம் இதற்கு சான்று

  • Jesi
  • April 15, 2019
50shares

வளர்ப்பு நாய் ஒன்று தீ விபத்திலிருந்து 30 பேரின் உயிரை காப்பாற்றி விட்டு, உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தியா உத்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த மாநிலத்தின் பாந்தா நகரில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் மின்கசிவு ஏற்பட்டது.

இதனால் தீபற்றியதை, ஒரு வீட்டின் வளர்ப்பு பிராணியாக இருந்த நாய் மோப்பம் பிடித்தது. தொடர்ந்து ஒரே இடத்தை பார்த்து நாய் குரைத்த நிலையில், தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

நாய் குரைத்ததை பார்த்து சுதாரித்துக் கொண்ட அந்த கட்டடத்தில் வாழும் மக்கள் சுமார் 30 பேர், அங்கிருந்து அவசரமாக வெளியேறினர்.

ஆனால் வீட்டில் கட்டியிருந்த நாயை அவிழ்த்துச் செல்ல யாருக்கும் நினைவின்றி போனது.

இந்நிலையில் நாய் கட்டப்பட்டிருந்த வீட்டில் சிலிண்டர் வெடித்து சிதறியதால் இந்த நாய் உயிரிழந்தது.

இதுகுறித்து பேசிய தீயணைப்புதுறை அதிகாரி, முதல் தளத்தில் மின்கசிவு ஏற்பட்டதால், அங்கு ஏற்பட்ட தீ, கட்டடம் முழுவதும் வேகமாக பரவியதாக தெரிவித்தார்.

தீ விபத்தால், அந்த கட்டமே முழுவதும் சேதம் அடைந்துள்ளது. கோடி கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க