வம்புக்கு இழுக்காதீர்கள்.. விளைவுகள் மோசமாக இருக்கும்: சீமானை எச்சரிக்கிறாரா லாரன்ஸ்?

159shares

எங்கள் மண்ணுக்கான, மக்களுக்கான தமிழ்த்தேசிய அரசியலை நாங்கள் முன்னெடுக்கிறோம். இந்த பாதையில் எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ள தயார். காரணம், நாங்கள் புலித்தலைவர் பிரபாகரன் வழிவந்தவர்கள் என கூறி தமிழகத்தின் வீதிகள் தோறும் தமிழ்த்தேசிய கருத்தாக்கத்தினை பேசிவருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழக இளையோர்கள் மத்தியில் சீமானின் பேச்சு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ள நிலையில், அவர் பேசும் அரசியல் காரணமாக சிலர் அவரை எதிர் முகாம் என்ற இடத்திலும் வைத்து பார்த்துவருகின்றனர்.

கடந்த காலங்களில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் வீரியமான போராட்டங்கள் நடைபெற்ற சமயத்தில், சினிமா பிரபலம் ராகவா லோரன்ஸ் மேற்கொண்ட சில நடவடிக்கைகளால், நாம் தமிழர் கட்சிக்கும் அவருக்கும் இடையே சில உரசல் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், சினிமா பிரபலம் ராகவா லோரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றினை இட்டுள்ளார். அதில், தனது மாற்றுத்திறனாளி நடன பள்ளியை சேர்ந்த மாணவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வளர்ந்து வரும் ஓர் அரசியல் தலைவரின் கட்சியினர் இடையூறு செய்வதாகவும், தன்னைப்போன்றே சில சினிமா பிரபலங்களும் - அரசியல் தலைவர்களும் அந்த குறிப்பிட்ட தலைவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தோடு இவற்றையெல்லாம் நிறுத்திக்கொள்ளாவிட்டால், தானும் அரசியல் களத்தில் குதிக்க வேண்டியிருக்குமென தெரிவித்துள்ளார்.

முந்தைய நிகழ்வுகளோடு இதனை பொருத்திப்பார்க்கையில், லோரன்ஸ் வளர்ந்து வரும் தலைவர் என குறிப்பிட்டுள்ளது சீமானைத்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இதையும் தவறாமல் படிங்க