ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில் தேசிய கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

18shares

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்க வேண்டுமென அன்றாடம் தமிழக அரசியல் கட்சிகளின் சார்பில் நாளிதழ்கள் உள்ளிட்டவை மூலம் மத்திய - மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல் விடுக்கப்பட்டுவருகிறது.

சிறையிலுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை குறித்த முடிவினை மாநில அரசே எடுத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்த மூன்றாம் நாள் அமைச்சரவையை கூட்டி, எழுவரையும் விடுவிக்க வேண்டுமென ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தது மாநில அமைச்சரவை.

நீண்ட நாட்கள் கழிந்த பின்பும் மேற்படி பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் மக்களவை தேர்தலுக்காக தென் சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான், "பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிப்போம் என்கின்றனர் திமுக, அதிமுகவினர். ஆனால், அவர்கள் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் - பாஜக ஆகிய தேசிய கட்சிகளின் நிலைப்பாடு எழுவர் விடுதலை குறித்து என்னவாக இருக்கிறது" என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க