மகளின் திருமணத்துக்காக நளினிக்கு கிடைக்குமா பிணை?

33shares

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்த மனுவின் மீதான இன்றைய விசாரணையில், நளினிக்கு பிணை வழங்குவது குறித்து, வரும் ஜூன் 11க்குள் தமிழக அரசுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், ஜூன் 11ம் திகதிக்கு முன்னதாகவே, பிணை வேண்டும் என்றால் விடுமுறை காலத்தில் செயல்படும் நீதிமன்றத்தை அணுகி பிணை பெறவும் நளினிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க