தெருநாய்களுக்கு உணவளித்தவருக்கு கிடைத்த சன்மானம்!

95shares

தெருநாய்களுக்கு உணவளித்தவருக்கு மூன்றரை லட்சம் அபராதம் விதித்து மும்பை ஹவுசிங் சொசைட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பை கண்டிவாலியில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வரும் இளம்பெண் நேகா தத்வானி. விலங்குகள் மீது பேரன்பு கொண்ட அவர், சொசைட்டிக்குள் உலாவரும் தெருநாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார்.

இதுகுறித்து பலமுறை எச்சரித்தும், அபராதம் விதித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், ஒன்று திரண்ட குடியிருப்புவாசிகள், வளாகத்துக்குள் தெருநாய் வளர்த்தால் அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

அதன் அடிப்படையில் அப்பெண்ணுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்தமாட்டேன் என தெரிவித்துள்ள நேகா, விரைவில் அங்கிருந்து வீட்டை காலி செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க