மோடி வந்த ஹெலியில் இருந்து இறக்கப்பட்ட கரிய நிற பெட்டிக்குள் இருந்தது என்ன?

50shares

பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகொப்டரில் இருந்து இறக்கிய இரும்பு பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திமோடி கடந்த 9-ம் திகதி கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்காவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

ஹெலிகொப்டர் மூலம் அவர் சித்ரதுர்கா வந்து இறங்கினார். அவரது பாதுகாப்புக்காக மேலும் 3 ஹெலிகொப்டர்கள் வந்தன.

அந்த ஹெலிகொப்டர்கள் தரை இறங்கிய நிலையில் மோடியின் ஹெலிகொப்டரில் இருந்து பெரிய வடிவிலான கறுப்பு நிற இரும்பு பெட்டியை பாதுகாப்பு வீரர்கள் இறக்கினார்கள்.

2 பேர் மிகவும் கஷ்டப்பட்டு இறக்கி சென்று அருகில் நின்றிருந்த காரில் ஏற்றினர். பின்னர் கார் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது.

அந்த பெட்டியில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பெட்டியில் பணம் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்தது.

ஆனால் அந்த பெட்டியில் பிரதமர் பாதுகாப்பு தொடர்பான தளபாடங்கள் இருந்ததாக பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டி உள்ளது.

இதையும் தவறாமல் படிங்க